ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 44 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த 44-வது லீக் போட்டியில் சென்னை, மும்பைஅணிகள் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் சென்னை அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துக்கு முன்னேறியது.
பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்திலும் உள்ளன. டெல்லி அணி ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தில் உள்ளது.
இரு வெற்றிகள் பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் ஆகிய அணிகள் 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.