ஐ.பி.எல்.

IPL 2026: புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே

ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 53 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடந்த 53-வது லீக் போட்டியில் சென்னை, லக்னோ மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் சென்னை அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியது.

ஐதராபாத் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 3வது இடத்திலும், ஆர்சிபி அணி 4வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6வது இடத்திலும் உள்ளன.

கேகேஆர், டெல்லி, மும்பை, லக்னோ அணிகள் 7, 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.