நடப்பு ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் 7 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே ஜோடி அதிரடியில் மிரட்டியது. இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
பவர்பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஆயுஷ் மாத்ரே 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.