19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணியில் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டுமே சொதப்பலாக உள்ளது. முன்னாள் கேப்டன் தோனி இந்த 3 போட்டியிலும் ஆடாதது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அணியின் கேப்டன் ருதுராஜிடம் ஒரு கேள்வி எழுப்பட்டது. அதில் உங்களுக்கு கேப்டன்சி மற்றும் பேட்டிங் இந்த இரண்டில் எது அதிக அழுத்தமாக உள்ளது என கேள்வி கேட்கப்பட்டது. அதில் யாரும் எதிர்பாரத விதமாக எனக்கு டாஸ் போடும் போது தான் அதிக அழுத்தமாக உள்ளதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.