தேர்தல் அறிக்கை வெளியீடு 
ஐ.பி.எல்.(IPL)

சித்த மருத்துவ பல்கலைக்கழகம், விளைபொருட்களுக்கு விலை நிர்ணயக் குழு -பாஜக தேர்தல் வாக்குறுதி

கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், மனைக்கட்டுகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு சம்பந்தப்பட்ட ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

* தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி

* விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ‘விலை நிர்ணயக் குழு’ அமைக்கப்படும்

* தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் ‘விவசாய நீர்ப்பாசன துறை’ உருவாக்கப்படும்.

* ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

* தாராபுரம் வட்டம் குளத்துப்பாளையத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

* மதச்சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின்படி, இந்துக் கோவில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர்,  சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* இந்து ஆலயங்கள் நிர்வாகம் சம்பந்தமான வழக்கில் 12-02-29018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்துள்ள தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படும். 

* கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், மனைக்கட்டுகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு சம்பந்தப்பட்ட ஆலயங்களிடம் ஒப்படைக்கப்படும்.

* கோவில்களில் தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.

* தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் அமைந்துள் பழநி நகரில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* ஆகம விதிகள் கற்பிப்பதற்கும், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் தனிப் பல்கலைக்கழகம் துவங்கப்படும்.

* கிராம கோவில்களில் பூசாரியாக பணிபுரிவோருக்கும், திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கும் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.5000 வழங்கப்படும்.

* கிராமக் கோவில் பூசாரிகளின் குடும்ப உதவித்தொகை உயர்த்தப்படும்.

* பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் திருக்கோவில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.