அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 10 பந்தில் 34 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
ரஷித் கானின் ஆல்ரவுண்டர் திறமையை பார்த்து அசந்துபோன சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர், ‘‘ரஷித் கான் எங்கள் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்துக்குப் பிறகு தற்போது நாள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்திய பிறகு நான்தான் எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்பது எனக்குத் தெரியும்.
நான் போட்டி முடிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள் சச்சின் தெண்டுகர் டுவிட்டை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினர். அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் அவருக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. இறுதில் அவருக்கு பதில் அளித்தேன்.