ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 226 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, நடத்தை விதிகளின் கீழ் தவறான செய்கை செய்ததற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் மற்றும் ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றுள்ளார். அவர் ஆட்டமிழந்த போது அதிருப்தி மற்றும் ஆபாச வார்த்தை பயன்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.