முகமது ஷமி
கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லும் முகமது ஷமி..!

ஐ.பி.எல். அணி நாளைக்குள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஐ.பி.எல். 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பிவிட்டு, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை தங்கள் அணியில் இணைக்க லக்னோ அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த்தையும் ராஜஸ்தான் அணிக்கு வழங்க லக்னோ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய முகமது ஷமி, 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சாம் கர்ரன்

மறுபுறம், காயம் காரணமாக சாம் கர்ரன் கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடியுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு ஷமி சென்றால், ஜாஃப்ரா ஆர்ச்சருடன் இணைந்து புதிய பந்தில் வலுவான பந்து வீச்சு கூட்டணியை பலப்படுத்தலாம்.

இருப்பினும், இந்த வீரர்கள் பரிமாற்றத்திற்கான இறுதி ஆவணங்கள் இன்னும் முடிவடையவில்லை. இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.

முகமது ஷமி சமீபத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

SCROLL FOR NEXT