கிரிக்கெட்

ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒன்று: கேப்டனான ஒரே மாதத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த கம்மின்ஸ்

தான் முதன்முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பேட் கம்மின்ஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

மாலை மலர்

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் முதன்முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது, வெறும் ஒரு மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் 2 மில்லியனிலிருந்து 3.5 மில்லியனாக உயர்ந்தது. ஐபிஎல் என்பது மிகப்பெரிய ஒன்று, ஒட்டுமொத்த ஐதராபாத் நகரமும் எங்களுக்குப் பின்னால் நிற்கிறது என கூறினார்.