ஜாகிர்கான்
கிரிக்கெட்

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகிர்கான் நியமனம்

2026 சீசன் முடிவடைந்த நிலையில் ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்த விலகினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே- CSK) அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்ட காலமாக நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் இருந்து வந்தார். இவர் 2026 சீசன் முடிவடைந்த நிலையில், தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

ஜாகிர்கான் நியமனம்

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர்கான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் எம்.எஸ். தோனியுடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2009 முதல் தலைமை பயிற்சியாளர் பதவி

கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பியற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங் தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

அவரின் பங்களிப்பிற்கு நன்றியும், பாராட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஸ்டீபன் பிளமிங் 2009 முதல் தலைமை பயற்சியாளராக இருந்து வந்த நிலையில் விலகியுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்லாமல் திணறி வரும் நிலையில் ஸ்டீபன் பிளெமிங்க விலகியுள்ளார்.

SCROLL FOR NEXT