ஐ.பி.எல். கிரிக்கெட் 2027 சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் 16-ந்தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரங்களை வெளியிட வேண்டும். இதற்கு வருகிற 15-ந்தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலக்கெடு நவம்பர் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி 15-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் காலக்கெடு 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.