ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி அதிரடியாக ஆடி 209 ரன்களை விளாசியது. எனினும், பெங்களூரு அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?
இந்தப் போட்டியின் போது கிட்டத்தட்ட மூன்று முறை மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட போட்டி நேரத்தில் ஒரு மணி நேரம் வரை தாமதமானது. இதன் காரணமாக போட்டி 19 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பெங்களூரு அணி வெற்றி பெற 213 இன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மழைக்கு பிறகு கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் அதிர்ச்சியளிததார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் 34 ரன்களை அடித்தனர். கடைசியில் போராடிய டிம் டேவிட் 40 ரன்களை அடித்தார்.
அடுத்து களமிறங்கிய க்ரூணல் பாண்டியா 16 பந்துகளில் 28 ரன்களையும், ரெமாரியோ ஷெப்பர்டு 15 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். எனிணும், பெங்ளூரு அணி போட்டி முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் லக்னோ அணி டக்வொ்த் லீவிஸ் முறைப்படி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.