ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, சூர்யவன்ஷி இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் இவர் கிளென் மேக்ஸ்வெல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 260 பந்துகளில் 500 ரன்களை கடந்து, அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீரராக கிளென் மேக்ஸ்வெல் இருந்தார். தற்போது வைவ் சூர்யவன்ஷி 222 பந்துகளிலேயே 500 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல். 2026 தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்றைய போட்டியில் சூர்யவன்ஷி 11 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை மட்டுமே சேர்த்தது.