கிரிக்கெட்

இளம் வயதில் ஆரஞ்சு தொப்பி வென்ற வீரர்... சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

சுப்மன் கில் இந்த சீசனை 732 ரன்களுடனும், சுதர்சன் 722 ரன்களுடனும் முடித்தனர்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி தனது பெயரை ஐ.பி.எ. வரலாற்றில் பொறித்தார்.

மேலும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான விருதை வென்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்த இளம் வயது அதிரடி வீரர், இந்த சீசனை 776 ரன்களுடன் நிறைவு செய்தார். அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களை அடித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் (10) மற்றும் சாய் சுதர்சன் (12) ஆகியோரால் அவரை முந்திச் செல்வதற்கு தேவையான ரன்களை எடுக்க முடியாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரின் இடம் உறுதி செய்யப்பட்டது.

ஐ.பி.எல். 2026 இறுதி போட்டிக்கு செல்லும் முன், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய கில் மற்றும் சுதர்சன், ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் நீடித்தனர். கில் இந்த சீசனை 732 ரன்களுடனும், சுதர்சன் 722 ரன்களுடனும் முடித்தனர்.

நடந்து முடிந்த ஐ.பி.எல். 2026 தொடரில் விராட் கோலி 600 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற ஆர்.சி.பி. அணிக்கு 156 ரன்கள் மட்டுமே தேவை. இதனால், சூர்யவன்ஷியின் சாதனையை கோலி முறியடிப்பதற்கான அனுமான வாய்ப்புகள் இல்லாமல் போகின.