கிரிக்கெட்

IPL 2026 | இஷான் கிஷன் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி

இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 63-ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணிக்கு துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாசட் முறையே 27 மற்றும் 15 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் 13 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

டெவால்டு பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்களும் ஷிவம் துபே 26 ரன்களை அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 180 ரன்களை குவித்துள்ளது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும், ப்ரஃபுல் மற்றும் இஷான் மலிங்கா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

181 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி முறையே 26 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவருடன் ஆடிய கிளாசன் 26 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

19 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் சார்பில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்களை குவித்தார். சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது மற்றும் அகீல் ஹொசைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.