கிரிக்கெட்

IPL 2026 | பந்துவீச்சில் சொதப்பினோம்... தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

மிட்செல் மார்ஷ் அதிரடியாக இடி 38 பந்துகளில் 90 ரன்களை விளாசினார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 59-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபா வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது சற்று கடினமாக இருந்தது. ஹார்ட் லென்த்தில் பந்தை அடிப்பது கடினமாக இருந்தது.

நாங்கள் 160-170 ரன்களை எதிர்பார்த்தோம், ஆனால் 180 ரன்கள் எடுத்தோம். பேட்டிங்கை பொறுத்தவரை இதைவிட சிறப்பாக எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. அவர்கள் (எல்எஸ்ஜி) நன்றாக பேட் செய்து, சில அற்புதமான ஷாட்களை ஆடினார்கள்.

நாங்கள் (ஷார்ட் பால் வீச) எதிர்பார்த்தோம், ஆனால் கடந்த போட்டியில் இங்லிஸ் வித்தியாசமாக விளையாடினார், மார்ஷும் ஷார்ட் பாலை நன்றாக ஆடுவார், அதனால் நாங்கள் ஹார்ட் லென்த்தில் அடிக்க முயன்றோம். அதைச் செயல்படுத்துவதில் நாங்கள் தவறிவிட்டோம், ஆனால் அவர்கள் அற்புதமான ஷாட்களை ஆடினார்கள்," என்று தெரிவித்தார்.