ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியள்ளது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஐ.பி.எல். சீசில் எந்த அணிகள் பிளஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது கடைசி வரை பரபரப்பாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது வரை 4-ஆவது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அணி எது என்பதில் முடிவு கிடைக்காத சூழல் தான் நிலவுகிறது.
இந்த நிலையில், ஐ.பி.எல். 2026 சீசனுக்கான பிளேஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல்களை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை பிளேஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நான்கு நாட்கள் நடைபெறுகின்றன.
இதில் இரண்டு நாட்கள் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பிரத்யேகமாகவும், மற்ற இரண்டு நாட்கள் அனைவருக்குமான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.
2026 ஐ.பி.எல். பிளேஆஃப் சுற்றின் முதல் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே20) இரவு 7 மணிக்கு ரூபே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். நாளை மறுநாள் (மே 21) இரவு 8 மணிக்கு முதல் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் அனைவரும் பங்கேற்க முடியும்.
இதேபோல் குவாலிபயர் 2 மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ரூபே கிரெடிட் கார்டு பயனர்களுக்கும், மே 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மற்றவர்களுக்கும் நடைபெறுகிறது.