கிரிக்கெட்

IPL 2026 | ரோகித் சர்மா, ரியான் ரிக்கில்டன் அபாரம்... லக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் அதிரடி தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தார். இவர் 25 பந்துகளில் 44 ரன்களை குவிக்க, நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 63 ரன்களும், ஏய்டன் மார்க்ரம் 31 மற்றும் ஹிமந்த் சிங் 40 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது.

229 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கில்டன் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முறையே 83 மற்றும் 84 ரன்களை குவித்தது. அடுத்து வந்தவர்களில் நமன் திர் 23 ரன்களை விளாச மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது மும்பை அணி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருக்கும்.