கிரிக்கெட்

IPL 2026 | ஐதராபாத்தை பதம் பார்த்த லக்னோ.. 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ரிஷப் பண்ட் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இன்று ஐதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய ஐதராபாத் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அபிஷேக் சர்மா டக் அவுட்டானார்.

டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும், இஷான் கிஷன் ஒரு ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து திணறியது.

அடுத்து கிளாசனுடன் நிதிஷ்குமார் ரெட்டி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால் அந்த அணியின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ்குமார் ரெட்டி 56 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. ரிஷப் பண்ட் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

அதேபோல 45 ரன்கள் வரை ஸ்கோர் செய்த எய்டன் மார்க்கரம் ஷிவம் குமார் பந்தில் லியாம் லிவிங்ஸ்டனுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மிட்சல் மார்சல் 14 ரன்களுடன் மலிங்கா பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். களமிறங்கிய ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து இலக்கை கடந்து லக்னோ வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT