ஐ.பி.எல். 2026-ன் 68-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்த 196 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க வீரர் குல்கர்னி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஜோஷ் இங்க்லிஸ் அபாரமாக விளையாடி 44 பந்தில் 72 ரன்கள் விளாசினார். ஆயுஷ் படோனி 18 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார்.
பஞ்சாப் அணி சார்பில் மார்கோ யான்சன், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் பஞ்சாப் அணிக்கு பிளேஆஃப் சுற்று வாய்ப்பு உள்ளது.