ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 50-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 111 ரன்களை விளாசினார். அடுத்து வந்த அர்ஷின் குல்கர்னி 17 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 38 ரன்ரளும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 210 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களான ஜேக்கப் பெத்தெல் மற்றும் விராட் கோலி மறையே 4 மற்றும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். இருவரம் முறையே 34 மற்றும் 71 ரன்களை குவித்து ஆட்டிழந்தர கடைசியில் டிம் டேவிட் 40 ரன்களை குவித்தார்.
கடைசியில் க்ரூணல் பாண்டியா மற்றும் ரொமரியோ ஷெப்பர்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனினும், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விகெட் இழப்புக்கு 203 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டக்வொர்த் லீவிஸ் முறையில் வெற்றியாளர் அறவிக்கப்பட்டது.