கிரிக்கெட்

IPL 2026| மிட்செல் மார்ஷ் அதிரடி... 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மிட்செல் மார்ஷ் அதிரடியாக இடி 38 பந்துகளில் 90 ரன்களை விளாசினார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 59-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் 20 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களும், உர்வில் படேல் 6 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய டெவால்டு பிரெவிஸ் 16 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். ஷிவம் தூபே தன் பங்கிற்கு 16 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு்கு 187 ரன்களை சேர்த்தது. லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் சிங் 3 விக்கெட்களையும், முகமது ஷமி மற்றும் ஷபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

188 ரன்களை துரத்திய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்களை விளாசினார்.

இங்லிஸ் 32 பந்துகளில் 36 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.