கிரிக்கெட்

IPL 2026 | சூப்பர் ஓவரில் சம்பவம் செய்த கொல்கத்தா அணி... லக்னோவை வீழ்த்தி அபார வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 38-ஆவது போட்டியின் கடைசி ஓவரில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் சூப்பர் ஓவர் வரை நீண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்தை எதிர்கொண்ட ஷமி சிக்சர் விளாச இரு அணிகளின் ஸ்கோர் சமமாகி, போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு முதல் பந்தை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் அடிக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்தார். முதல் ஓவரின் 3-ஆவது பந்தில் மார்க்ரம் ரன் எதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

லக்னோ அணி சூப்பர் ஓவரில் 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி வெறும் 2 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

லக்னோ அணிக்கு எதிராக 6 பந்துகளில் 2 ரன்களே தேவை என்ற நிலையில், கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி தனது அணிக்கு வெற்றியை உறுதிப்படுத்தினார்.