கிரிக்கெட்

IPL 2026: போராடி தோற்ற குஜராத்.. 6 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

சாய் சுதர்சன் 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அசத்தினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 2026 சீசனில் 9-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை நடத்தின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்பன் ரியான் பராக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சூர்யவன்ஷி 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 32 பந்தில் அரைசதம விளாசிய ஜெய்ஸ்வால்36 பந்தில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்தவர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 210 ரன்கள் குவித்தது.

ரஷித் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 211 என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கியது. சாய் சுதர்சன் 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஜோஸ் பட்லர் 26, ரஷீத் கான் 24, ரபாடா 23, குமார் குஷக்ரா 18 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். ஒட்டுமொத்தமாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணியால் 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது.