கிரிக்கெட்

IPL 2026 | ரபாடா, ஹோல்டர் அபார பந்துவீச்சு... 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

ரபாடா மற்றும் ஜேடன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 56-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரும், கேப்டனுமான சுப்மன் கில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஜாஸ் பட்லர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த நிஷாந்த் சிந்து 22 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் விளாசினர். ஒருபக்கம் துவக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அதிகபட்சமாக 61 ரன்களை குவித்தார். இதன் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களௌ சேர்த்தது.

169 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் ரன் எதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா 6 ரன்களிலும், அடுத்து வந்த இஷான் கிஷன் 11 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 86 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா மற்றும் ஜேடன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.