கிரிக்கெட்

IPL 2026 | கேப்டன் கில் அதிரடி ஆட்டம்... பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற குஜராத்

குஜராத் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷத் கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 42-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு சார்பில் படிக்கல் 40 ரங்களும், விராட் கோலி 28 ரன்களும் அடித்தனர்.

குஜராத் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷத் கான் 3 விக்கெட்களையும், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்களையும் சிராஜ் மற்றும் ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

156 எனும் எளிய இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு ஷுப்மன் கீல், ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். தொடர்ந்து ஆடிய தேவாட்டியா 27 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.