கிரிக்கெட்

IPL 2026 இறுதிப்போட்டி: 155 ரன்களில் சுருண்ட குஜராத்.. தொடரை வெல்லுமா ஆர்சிபி?

குஜராத் டைட்டன்ஸ் 26 ரன்கள் எடுப்பதற்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

ஐபிஎல் 2026ன் இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டஃபி வீசிய முதல் ஓவரில் சுதர்சன் 2 பவுண்டரிகள் விளாசினார். 2வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார்.

இந்த ஓவுரில் கில் ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த கில், அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

4வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் 12 பந்தில் 12 ரன்களும், சுப்மன கில் 8 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அடைந்தனர். குஜராத் டைட்டன்ஸ் 26 ரன்கள் எடுப்பதற்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

அதேபோல நிஷாந்த் சிந்து 20 ரன்களுடன் ராசிக் சலாமின் பந்தில் கேட்ச் ஆனார். நிதானமாக விளையாடி வந்த நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ஆனால் குருணால் பாண்டியாவால் ஸ்டம்ப் அவுட் ஆனார்.

ராகுல் திவேதியா 7 ரன்களிலும், அர்ஷத் கான் 15 ரன்களிலும் ஹேசில்வுட் பந்திலும் ஆட்டமிழந்தனர். 15 ஓவர்கள் முடிவில் குஜராத் 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி குஜராத் அணியை ஓரளவு மீட்டெடுத்தார்.

7 ரன்களுடன் ஜேசன் ஹோல்டர், புவனேஷ்வர் குமார் பந்திலும், ரஷித் கான், ராசிக் சலாம் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 155 ரன்களை குஜராத் குவித்துள்ளது.

156 ரன்கள் எடுத்து ஆர்சிபி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்ற ஆவலும் படபடப்பும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.