கிரிக்கெட்

IPL 2026: அதிரடி காட்டிய டெல்லி.. ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி

ராணா 33(17) ரன்களிலும், ராகுல் 75(40) ரன்களிலும் வெளியேறினார்.

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் ரியான் பராக் 90 ரன்களும், த்ரூவ் ஜுரேல் 42 ரன்களும், டொனோவன் ஃபெரைரா 47 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், அக்சர் படேல், நடராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 226 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி பேட்டிங் செய்தது. கேல்.எல்.ராகுல்-பதும் நிசாங்கா அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவரிலேயே அணி 100 ரன்களை தொட்டது. 23 பந்துகளில் அரைசதம் அடித்த நிசாங்கா 62(33) ரன்களில் அவுட்டானார்.

ராகுலுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர ராணா 33(17) ரன்களிலும், ராகுல் 75(40) ரன்களிலும் வெளியேறினார்.

அடுத்த இறங்கிய ஸ்டப்ஸ்-அஷுதோஷ் ஜோடியும் அதிரடி காட்ட இறுதியில் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், பர்கர் மற்றும் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் எடுத்தனர்.