ஐ.பி.எல். 2026 டி20 தொடரில் நேற்று (மே 17) இரவு நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றதோடு, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் மகிழ்ச்சி தெரவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், சொந்த மண்ணில், குறிப்பாக தோல்விக்கு பிறகு வெற்றி பெறுவது நிச்சயமாக ஒரு சிறப்பான விஷயம். ரசிகர்கள் எங்களை ஆதரிக்க வருகிறார்கள், அதனால் இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. முன்பு நாங்கள் எளிதாக விக்கெட்டுகளை இழந்து வந்தோம், ஆனால் இன்று ஒரு நல்ல தொடக்கம் அமைந்தது, அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு உதவியது.
இன்று அதன் காரணமாகவே எங்களால் போராடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. பல போட்டிகளில், பவர்பிளேக்கு பிறகு நாங்கள் மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசியுள்ளோம். டைம் அவுட்டின் போது, 'எந்த நேரத்திலும் மீண்டு வரலாம்' என்று நாங்கள் பேசிக்கொள்வோம்.
இன்றும்கூட, மிடில் ஓவர்களில் நாங்கள் அதை செய்தோம். இன்று எங்கள் 'இளம் வீரர்' எங்களுக்காக அதை செய்தார். புதிய பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஃபீல்டிங் அமைப்பது, அவர்களுக்கு எப்படி சிரமத்தை கொடுப்பது என்பது பற்றி நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்," என்றார்.