மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் நாளை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களின் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந்தேதி அபுதாபியில் வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் தொடர்ந்து 3-வது முறையாக வெளிநாட்டில் நடக்கிறது. 2024-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடந்தது. 2025-ம் சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெட்டாவில் நடந்தது.
தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் அளித்தபிறகு ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகம் தயாரிக்கும்.