கிரிக்கெட்

IPL 2026 | பயிற்சி ஆட்டத்தில் 42 பந்தில் 94 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 42 பந்தில் 94 ரன்கள் விளாசி, எதிரணிகளுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார்

மாலை மலர்

இந்திய டி20 அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரில், தொடக்கம் முதல் அரையிறுதி போட்டி வரை சொதப்பினார். ஆனால், இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். அந்த உத்வேகத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்.

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அவருடைய அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அணியில் உள்ளவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் 42 பந்தில் 94 ரன்கள் விளாசியுள்ளார்.

இதனால் ஐ.பி.எல். தொடரில் அவருடைய சரவெடி ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.