ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் ஆட்ட வீரர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் - சன்ரைசஸ் அணிகள் இன்று மொத உள்ளனர்.
நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் நிகர ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வது இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்திலும் இருக்கிறது. இந்த இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன.
சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் 235 ரன்கள் குவித்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்து வலுவான நிலையில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோரின் வேகம் மற்றும் விக்கெட் வீழ்த்தும் திறன், மிடில் ஓவர்களில் ரஷித் கானின் துல்லியம் மற்றும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பந்துவீச்சு போன்ற சாதனைகளை படைத்த ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோரும் மற்றும் சிறந்த ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பலம் அதிகரித்து வருகிறது.
சன்ரைசஸ் அணியின் முன்வரிசை வீரர்களான அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது.
நடப்பு சீசனில் பந்துவீச்சாளரான இஷான் மலிங்கா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் பாட் கம்மின்ஸ், ஷிவாங்க் குமார், ஷகிப் ஹுசைன் ஆகியோருடன் பலம் சேர்ந்து சிறந்த செயல்திறன் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.