கிரிக்கெட்

ரைலி ரூசோவை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

மாலை மலர்

துபாய்:

17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஏற்கனவே, இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.