அக்யூப் நபி
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பேட்டிங்கில் மிரட்டி வரும் வெஸ்ட் இண்டீஸ்- ஜான் கேம்ப்பெல் அரைசதம்

ஜான் கேம்ப்பெல் 29 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. விராட் கோலி, சுப்மன் கில் சதம் விளாசினர்.

இந்த நிலையில் 2-வது போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான் கேம்ப்பெல், கார்ட்டி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கார்ட்டி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார்.

ஜான் கேம்ப்பெல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓவரில் 78 ரன்களை தொட்டது. ஜான் கேம்ப்பெல் 52 ரன்களுடனும், ஷாய் ஹோப் 11 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் நபி இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

SCROLL FOR NEXT