ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட இருக்கிறது.
இந்தப் போட்டித்தொடரில் மொத்த அணிகளின் எண்ணிக்கை 10-லிருந்து 14-ஆக விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதில் தலா ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களும், அதைத் தொடர்ந்து சூப்பர் சிக்ஸ் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படும்.
இதற்கு முன்னதாக 53 சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்த அட்டவணையில் 10 டெஸ்ட் போட்டிகள், 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி-20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.
இதில் முதலாவதாக ஜூன் 6-ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது.
இதைத்தொடர்ந்து அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்திய வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்க இந்தியா வர உள்ளது.
இறுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடருடன் இந்த அட்டவணை நிறைவடைய உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் 2027 ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாத தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.