இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 100 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களும் விளாசினர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 2-வது இடத்திலும், மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோரூட் 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித், கமிந்து மெண்டிஸ், குன் வில்லியம்சன், டெம்பா பவுமா முறையே 4 முதல் 7-வது இடங்களை பிடித்துள்ளனர்.
ஜெய்ஸ்வால் 8-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ரிஷப் பண்ட் 13-வது இடத்தில் இருந்து 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.