இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது. அடுத்து நடந்த 3 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூர்யவன்ஷிக்கு இடமில்லை. சஞ்சு சாம்சனும், வாஷிங்டன் சுந்தரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணியின் விவரம் வருமாறு:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெக்டே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
போக்குவரத்து நெரிசல் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு இந்திய அணி வீரர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது.