கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் 3வது போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

3வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்கிறது.

SCROLL FOR NEXT