கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

சுப்மன் கில் இந்திய அணி கேப்டனாக உள்ளார்.

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் முல்லன்பூர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மானவ் சுதார் அறிமுகம் ஆகிறார்.

இந்திய அணி விவரம் வருமாறு:

கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.