கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை 2026: நெதர்லாந்துக்கு எதிராக 2 மாற்றத்துடன் இந்தியா பேட்டிங் தேர்வு

36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மாலை மலர்

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குல்தீப் யாதவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.