கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: மீண்டும் தங்கப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 216 ரன்கள் குவித்தது.

ஆசிய போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

மகளிருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா-ஸ்மிருதி மந்தனா ஜோடி 99 ரன்கள் எடுத்தது.

மந்தனா அரை சதம்

அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னில் அவுட்டானார்.

ரிச்சா கோஷ் அதிரடி

கடைசி கட்டத்தில் இறங்கிய ரிச்சா கோஷ் 22 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 49 ரன் குவித்தார்.

இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

தொடக்க வீராங்கனை கேப்டன் சமாரி அடப்பட்டு அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், இலங்கை அணி 15.4 ஓவரில் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தங்கம் வென்ற இந்தியா

இதன்மூலம் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், ஆசிய போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. பாகிஸ்தான் அணி வெண்கலம் வென்றது.

இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட், ஷபாலி வர்மா, ஸ்ரீசரணி, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடந்த ஆசிய விளையாட்டிலும் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT