கிரிக்கெட்

இன்று 4-ஆவது டி20 போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

3-ஆவது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற 3-ஆவது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

தொடர் வெற்றி யாருக்கு?

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 4-ஆவது டி20 போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு (அக்டோபர் 14) நடைபெறுகிறது. கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும், தொடரை கைப்பற்றும் முனைப்பில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வெஸ்ட் இண்டீஸ் அணி முயற்சிக்கும் என தெரிகிறது.

தொடரைக் கைப்பற்ற இந்திய அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்திய அணி பதிலடி?

இந்திய அணியில் சாம்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் நல்ல பார்மில் உள்ளனர். ராஞ்சியில் நடந்த 2-ஆவது போட்டியில் இந்தியா 249 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சில் சொதப்பியதால் தோல்வி அடைய நேரிட்டது.

இதற்கு 3-ஆவது ஆட்டியில் பரிகாரம் தேடிக் கொண்ட இந்திய பவுலர்களில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார். அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட் டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT