கிரிக்கெட்

இந்திய டி20 அணியின் கேப்டனாக SKY அதிகாரபூர்வ அறிவிப்பு

டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

டி20 அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

ஒருநாள் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.