ரச்சின் ரவீந்திரா
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

முதல் 3, அடுத்த 2 போட்டிகளுக்கென இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

நியூசிலாந்து அணி இன்று அறிவிப்பு

டி20 தொடர் வருகிற 22-ந்தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது. நவம்பர் 1-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது. ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது.

20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஒரு நாள் போட்டிக்காக நியூசிலாந்து அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.

ரச்சின் ரவீந்திரா

காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் ரச்சின் ரவீந்திரா அணிக்கு திரும்பி உள்ளார். பெர்குசன், டிம் ஷெய்பர்ட் ஆகியோரும் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

முதல் 3 போட்டிக்கான அணி, கடைசி 2 போட்டிக்கான அணி என 2 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கு பிறகு டெஸ்ட் நடைபெறுகிறது. அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் தேர்வு இருக்கிறது. காயத்தில் இருந்து குணமடையாததால் போல்க்ஸ், ரூர்கே, பென்சியர்ஸ் ஆகியோர் தேர்வாகவில்லை.

முதல் 3 போட்டிக்கான நியூசிலாந்து வீரர்கள்:-

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், கான்வே, ஜேக்கப் டபி, மேட் ஹென்றி, ஜேமிசன், டாம் லாதம் , டேரில் மிட்செல், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் சுமித், வில் யங், பிளேயர் டிக்னர்.

கடைசி 2 போட்டிக்கான அணி வீரர்கள்:-

சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டபி, மாட் பிஷர், லாக்கி பெர்குசன், மிட்ச் ஹே, நிக் கெல்லி, டிம் செய்பர்ட், பிளேயர் டிக்னர், வில் யங்.

SCROLL FOR NEXT