கிரிக்கெட்

3வது டி20 போட்டி: ஜிம்பாப்வே உடனான தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா இந்தியா?

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

ஹராரேயில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த 2வது போட்டியிலும் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.

அயர்லாந்து, இங்கிலாந்திடம் 6 போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த இந்தியா இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என கைப்பற்றியுள்ளது.

தொடரை முழுமையாக வெல்லுமா?

இந்நிலையில், இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (26-ம் தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே

முதல் இரு ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரில் ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இருக்கிறது.

இந்தியா தொடரை வசப்படுத்தி விட்டதால் இதுவரை ஆடாத பிரப்சிம்ரன் சிங், ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யுனைட்/ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.