கிரிக்கெட்

நாளை 4வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

3வது போட்டியில் பந்துவீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்தியா 2-1 என முன்னிலை

லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஐதராபாத்தில் நாளை நடைபெறுகிறது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரைக் கைப்பற்ற இந்திய அணி போராடும் என்பதால் நாளைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT