லூக்கி பெர்குசன்
கிரிக்கெட்

தொடர்ச்சியாக 2 தோல்வி: இந்தியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சில் மாற்றம் செய்த நியூசிலாந்து

பெர்குசன் 3-வது போட்டியில் விளையாடமாட்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது.

இந்திய டி20 அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் திலக் வர்மா சிறப்பாக விளையாட இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடைசி 3 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் யுனிட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

லூக்கி பெர்குசன்

முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய லூக்கி பெர்குசன் 3-வது போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைல் ஜேமிசன் 4-வது மற்றும் 5-வது போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை.

மேட் ஹென்ரி

மேட் ஹென்ரி முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் கடைசி மூன்று போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 நியூசிலாந்து மண்ணில் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் தோல்வியடைந்தது கிடையாது.

SCROLL FOR NEXT