கிரிக்கெட்

இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்? - பிசிசிஐ தீவிர ஆலோசனை

தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கையில் தான் புதிய கேப்டன் தேர்வு உள்ளது.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் கேப்டன் பதவியில் இருந்து அவரை தூக்கிவிட்டு சுப்மன் கில், திலக் வர்மா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கையில் தான் புதிய கேப்டன் தேர்வு உள்ளது. கம்பீர் கொல்கத்தா அணி பயிற்சியாளர்களாக இருந்தபோது அவ்வணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உடன் பிணக்கு நிலவியது. இதனால் ஸ்ரேயாஸை லிஸ்டில் இருந்து தட்டிக்கழிக்க கம்பீர் முயலலாம் என்று கூறப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கும் டி20 கேப்டன் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவும் கேப்டன்சிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார்.

அவரது தலைமைத்துவத் சோதிக்கவே 'இந்தியா ஏ' அணியின் கேப்டனாக அவரை பிசிசிஐ நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டி 20 அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.