ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, இலங்கை அணிகள் முன்னேறின.
ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் காலிறுதி போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன.
ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் இலங்கை, மலேசியா வீராங்கனைகள் மோதினர். டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.
கேப்டன் சமாரி அடப்பட்டு அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய மலேசியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இலங்கை அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜப்பான் அணி 19.5 ஓவரில் 57 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.
ஏற்கனவே, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.