டி20 உலகக் கோப்பையை இந்தியா மீண்டும் தக்கவைத்தது.
இந்நிலையில், ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி, டி20 அணிக்கான பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.
டி20 தரவரிசையில் இந்திய அணி 275 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி 262 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 258 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் 4,5,6,7-வது இடங்களில் உள்ளன.
டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாக இத்தாலி அணி 3 இடம் முன்னேறி 23 வது இடத்தில் உள்ளது.